புதுபெலன் தாருமே

 

புதுபெலன் தாருமே

ஆவியான தேவனே

பெலன் எனக்கில்லையே

உம்பெலன் வேண்டுமே (2)

 

     பெலனற்ற எனக்கு உதவிடவேண்டுமே

     பெலனான கன்மலையே (2)

 

கழுகைப்போல செட்டையடித்து எழும்பிடுவேன் நான்

கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான்

ஓடினாலும் இளைப்படையேனே

நடந்தாலும் நான் சோர்வடையேனே - (2)  - புதுபெலன்

 

இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள்

வாலிபரும் வழிதவறி இடறிபோவார்கள்

கர்த்தருக்கு காத்திருப்பேனே

புதுபெலன் என்றும்; அடைந்திடுவேனே - (2) - புதுபெலன்

 

சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை

சர்வவல்ல தேவனவர்  இளைப்படைவதில்லை

சோர்ந்திடும் போது பெலன்தருவாரே

சத்துவம் என்னில் பெருகச்செய்வாரே - (2)    - புதுபெலன்